கடலோர பாதுகாப்புபடையின் தலைமை இயக்குனர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு

ஒக்டோபர் 11, 2022

இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்து ஓய்வுபெறவுள்ள ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர் 11) சந்தித்தார்.

இங்கு நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது, பாதுகாப்புச் செயலாளர் பிரியாவிடை பெற்றுச் செல்லும் கடலோர பாதுகாப்புபடை தலைவரின் சேவைகளைப் பாராட்டியதுடன், அவரின் எதிர்கால நிகழ்வுகள் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடலோர பாதுகாப்புபடை தலைவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரியர் அட்மிரல் ஏகநாயக்க 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி இலங்கை கடலோர பாதுகாப்புபடையின் 6ஆவது பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த திணைக்களத்தின் பணிப்பாளராக பதவியேற்கும் முன்னர், இலங்கை கடற்படையின் கடற்படை திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளராக அவர் சேவையாற்றி இருந்தார்.

அவர் 35 வருடங்கள் கடற்படையில் சேவையாற்றிய பின்னர் சேவையிலிருந்து நாளை (ஒக்டோபர் 12) ஓய்வு பெறுகின்றார்.