ரஷ்ய பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 27, 2019

ரஷ்ய விஞ்ஞானி கலாநிதி. இவ்ஜீனி யுஸசெவ் (Evegeny Usachev) உள்ளிட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (அகஸ்ட், 26) சந்தித்தது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் ரிஜே கொடித்துவக்கு அவர்களும் கலந்து கொண்டார்.
முன் தினம் கலாநிதி. இவ்ஜீனி யுஸசெவ் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்ததுடன் வெடிகுண்டு, கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியக்கூடிய 50,000.00 அமெரிக்க டொலர் பெறுமதியான வெடிபொருட்களை கண்டறியும் கருவிகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.