பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

ஒக்டோபர் 12, 2022

இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு 'பொப்பி மலர்’ அணிவித்தனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஒக்டோபர் 12) இடம் பெற்ற நிகழ்வின் போது மேற்படி சங்கத்தின் உப தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த அம்பன்பொல (ஓய்வு) தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்ததுடன் பொப்பி மலரை அணிவித்தனர்.

உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் பொப்பி மலர் தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கிறது.

மேற்படி நிகழ்வை மையப்படுத்தி சேகரிக்கப்படும் நிதியானது படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும்.

இந்நிகழ்வில், மேற்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் (ஓய்வு) பி.கே.சி. சாந்திலால் கங்காணம்கே, பொப்பி மலர் ஞாபகார்த்த குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ருவன் வணிகசூரிய, மேஜர் சில்தாஸ் டி சில்வா, திருமதி சாந்தி ஹெட்டியாராச்சி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.