ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு பயிற்சி நிறைவு

ஒக்டோபர் 18, 2022

குக்குலேகங்காவில் அமைந்துள்ள ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் 2022 ஒக்டோபர் 10 முதல் 14 வரையிலான காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பு பாடநெறி- 2022 யை நடாத்தியது.

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைதி நடவடிக்கை மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை பாடநெறியினை நடத்துவதற்கு தங்கள் ஆலோசனை ஆதரவை வழங்கின. இந்த பாடநெறியை இலங்கை இராணுவத்தின் 31 அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் 2 அதிகாரிகள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் கலந்துகொண்டனர்.

விரிவுரைக் குழுவில் உருகுவேயைச் சேர்ந்த சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பின் கேணல் கோன்சலோ மிலா (ஓய்வு), டென்மார்க்கைச் சேர்ந்த திரு ஜென்ஸ் ஆண்டர்சன் மற்றும் உள்நாட்டு பயிற்றுனர்களான கேணல் பிடிடிடி ஜயரத்ன, இலங்கை கவச வாகன படையணியின் லெப்டினன் கேணல் எம்எல்என்யு லியனகே, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் எம்எஸ்ஆர் மொஹமட், இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் மேஜர் கேஎச்டீ மெண்டிஸ் ஆகியோர் பணியாற்றினர்.

சர்வதேச அமைதி நடவடிக்கை என்பது அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட பாதுகாப்பு உதவித் திட்டமாகும் இது ஐக்கிய நாடுகள் மற்றும் பிராந்திய அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கைகளை (PSOs) திறம்பட நடத்துவதற்கான சர்வதேச திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நட்பு நாடுகளின் திறன்கள், பயிற்சி மற்றும் அமைதி காக்கும் திறன்களை நிலைநிறுத்துவதற்கான திறன்களை உருவாக்குகிறது.

இந்தப் பயிற்சிப் பாடநெறியின் நோக்கமானது இலங்கை ஆயுதப் படைகள் மற்றும் பிற நாடுகளின் அதிகாரிகளை எதிர்கால ஐ.நா. அங்கத்தினர்களாகவும், ஐ.நா. பணி அதிகாரிகளாகவும், ஐ.நா. இராணுவக் கண்காணிப்பாளர்களாகவும் பணியமர்த்துவதற்கு முன் அவர்களை ஆயத்தப்படுத்துவதும் ஆகும். மேலும், ஐ.நா அமைதிப்படை உறுப்பினர்களாக பொது மக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ அவர்களினால் அன்றய நிறைவுரை நிகழ்த்தப்பட்டது.

நன்றி - www.army.lk