கடலோர காவல்படை யினரால் காலிமுகத்திடல் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது

ஒக்டோபர் 22, 2022

இலங்கை கடலோர காவல்படை கப்பல் சுரக்ஷாவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்ய சிரமதான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

சுரக்ஷா கப்பலின் குழுவினர், பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் பிற குப்பைகூளங்கல் கடலுக்கு பொறுப்பற்ற முறையில் அப்புறப்படுத்துவதால் அழிந்து வரும் கடல் சூழல் சீரமைப்பதற்கு மற்றும் அதன் சீரான செயல்பாட்டிற்கு உதவும் வகையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.

சுரக்ஷா கப்பல் ஒக்டோபர் 21 ஆம் திகதி தனது 5 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.