இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

ஒக்டோபர் 26, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், சமீபத்தில் இந்தியாயாவில் நடைபெற்ற  “டெப்எக்ஸ்போ 2022” (DefExpo 2022) கண்காட்சியில் போது பல இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ‘DefExpo 2022’ கண்காட்சிக்கு விஜயம் செய்த போது, இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார்  அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சுமூக கலந்துரையாடலின் பின்னர் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சரும் இந்திய பாதுகாப்பு செயலாளரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தனது இந்தியாவிற்கான விஜயத்தின் போது இந்திய பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹான், இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதாரி ஆகியோரையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்புகளின் போது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.

இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார்   

இந்திய பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹான்

இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார்

விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதாரி