இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

ஒக்டோபர் 28, 2022

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் 7ஆவது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பூஜித விதான நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, ரியர் அட்மிரல் பூஜித விதான அக்குரேகொடையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து இன்று (ஒக்டோபர் 28) தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதுவரை காலம் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அண்மையில் சேவையிலிருந்த ஓய்வு பெற்றுச் சென்றமையடுத்தே அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இருந்த ரியர் அட்மிரல் பூஜித விதான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.