'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019' நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஆரம்பவுரை...
ஆகஸ்ட் 29, 2019இன்று (ஆகஸ்ட்,29) இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019' அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள் வரவேற்றார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாடு இராணுவத்தின் முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும். இந்த ஆண்டு இடம்பெறும் இம்மாநாடு சர்வதேச மாநாட்டு தொடரில் 09 வது ஆகும்.
இம்முறை இடம்பெறும் இம்மாநாட்டின் தொனிப்பொருள் "தற்கால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவ சிறப்பியல்பு" என்பதாகும். இவ்வருடம் இடம்பெறும் இம்மாநாட்டில் அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பங்குகொள்கின்றனர்.
இம்மாநாட்டின் ஆரம்ப உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், வளர்ந்து வரும் நாடுகளின் இராணுவத்தினை எவ்வாறு சிறந்த முறையில் மாற்றியமைக்க மற்றும் நவீனமயமாக்க முடியும் என்பது குறித்த உலகளாவிய கலந்துரையாடலின் பின்னணியில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது எனவும் இந்த மன்றத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் இராணுவ நவீனமயமாக்கல், வளக் கட்டுப்பாடுகள் மற்றும் பங்கேற்கும் தேசிய அரசுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு இடையிலான ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதற்கான தெளிவான ஒருமித்த கருத்து ஆகியவற்றை பிரதிபலிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.