முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

ஒக்டோபர் 28, 2022

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2022. 11. 15ஆம் திகதி முதல் 2022. 12. 31ஆம் திகதி வரையான காலத்தையே பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022.10.25ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொள்ள முடியும் என்றும் மேலும் ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் அதை வெளியேற்றுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.