கடலோரப் பாதுகாப்பு படையினரால் ரஷ்ய தம்பதியினர் மீட்பு

ஒக்டோபர் 31, 2022

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் உயிர்காக்கும் வீரர்களினால் ஒக்டோபர் 29 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பரப்பில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த கடற்பரப்பில் குளித்துக் கொண்டிருந்த 23 மற்றும் 20 வயதுமிக்க ரஷ்ய பிரஜைகள் இருவர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.;

அப்பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டபோதிலும், கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டினரின் உயிர்கள் கடலோரப் பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையினால் காப்பாற்றப்பட்டன.

மேலும், இதுவரை 762 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தமாக 1,770 பேர்கள் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரால் காப்பற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.