ஜின் கங்கையில் சிக்கியுள்ள கழிவுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டது
ஒக்டோபர் 31, 2022பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையில் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
கனமழை காரணமாக, ஜின் கங்கையில் நீர் மட்டம் உயர்வதால், குப்பைகள் மற்றும் மர எச்சங்கள் இந்த பாலங்களின் கீழ் சிக்கி, ஆற்றின் கீழ் நீரோடைக்கு இடையூறாக உள்ள துடன் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
இதனை சீர்செய்வதற்காக, பாலங்களுக்கு அடியில் தேங்கியுள்ள மரக் குப்பைகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றது.
அதன்படி, தெற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் பணியாற்றும் கடற்படை சுழியோடிக் குழுக்கள் மற்றும் அவசர நடவடிக்கை படகுப் படைப் பணியாளர்கள் இணைந்து பாலங்களில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, ஆற்றின் நீரோட்டத்தை சீரான முறையில் பேனுவதற்கு நடவடிக்கை எதுத்தனர்.