அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

நவம்பர் 01, 2022

அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம், பாதுகாப்பு மற்றும் ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார்.

இவ் விஜயத்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதியுடன் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி நெல்சன், அமெரிக்க உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. சேத் நெவின்ஸ் மற்றும் திருமதி. அனாமிகா சக்ரவர்த்தி (அரசியல் அதிகாரி) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Courtesy - www.army.lk