மலையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

நவம்பர் 01, 2022

மேல், சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
 
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
பொதுமக்களும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.