Navy conducts events under ‘Rata Wenuwen Ekata Sitimu’ programme in Jaffna

ஆகஸ்ட் 29, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 'தேசத்திற்காக ஒன்றினைவோம்' கருத்திட்டத்திற்கு அமைய, யாழ் மற்றும் அதன் தீவுப் பகுதிகளில் இம்மாதம் ( ஆகஸ்ட் ) 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் பணிப்புரிக்கு அமைவாக வட பிராந்திய கடற்படை கட்டளையகத்தினால் காரை நகர், மந்தகல், வெற்றிலைக்கேணி, ஊர்காவற்றுறை, மண்டைத்தீவு மற்றும் புங்குடு தீவு ஆகிய பிரதேசங்களில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டங்கள், மரம் நடுகை திட்டங்கள், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள், போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிரமதானா நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டன. வெற்றிலைக்கேணி கிரிகெட் அணியினருடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் நெடுந்தீவில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன.