தேசிய பளுதூக்கும் போட்டியில் இராணுவ பளுதூக்கும் வீரர்கள் சம்பியன்

நவம்பர் 03, 2022

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 29) இடம் பெற்ற தேசிய பளுதூக்கும் போட்டி- 2022 நிகழ்வில் இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர்கள் 4 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றனர்.

இலங்கை பளுதூக்கும் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், சிறந்த பளுதூக்கும் வீரராக அதிகாரவணையற்ற அதிகாரி II, எஸ்கேஎஸ் பிரதீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.