பாதுகாப்பு செயலாளர் சந்தஹிரு சேயவில் கட்டின அங்கிகளை வண. மகா சங்கத்தினரிடம் கையளித்தார்

நவம்பர் 04, 2022
  • சமய நிகழ்வில் போது முப்படைகள் மற்றும் முன்னாள் போர் வீரர்களுக்கான ஆசிர்வாதங்களும் இடம்பெற்றது.

அநுராதபுரத்தில் உள்ள சந்தஹிரு சேய வளாகத்தில் நீண்டகால மத வழிபாடுகளில் ஒன்றான 'கட்டின வஸ்திர பூஜை' (பௌத்த மதகுருக்களுக்கு புதிய அங்கிகளை வழங்குதல்) நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டு வண. மகா சங்கத்தினரிடம் கட்டின அங்கிகளை இன்று (ஒக்டோபர் 04) கையளித்தார்.

ஜெனரல் குணரத்ன நேற்று (03) மாலை அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அஞ்சலி செலுத்தும் போது, புனித ஸ்தலத்தின் மேல் கோபுரத்தில் உன்னத ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக புதிய கட்டின அங்கிகளை அணிவித்தார்.

அதனையடுத்து, மதவாச்சி கிடலேகம ஸ்ரீ தலதா விகாரையின் பிரதமகுரு தலைமையில் அன்றைய தினம் மாலை சந்தஹிரு சேய வளாகத்தில் சமய நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லமாஹேவகே (ஓய்வு) ஆகியோரும் இந்த வருடாந்த மத நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.

இதேவேளை, இன்று காலை வருடாந்த கட்டின வைபவத்துடன் வண. மகா சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் இடம்பெற்றது.

சந்தஹிரு சேயவில் இன்று நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் போது அனுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. ஈத்தலnவட்;டுனவெவே ஞானதிலக தேரர் தலைமை தாங்கி பாதுகாப்பு படையினர் மற்றும் சந்தஹிரு சேயவிற்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

இந்த புனித நினைவுச்சின்னத்தின் நிர்மாணப் பணிகள் தாய்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களுக்கு, தேசத்தின் நன்றியை செலுத்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வப் பௌர்ணமி நாள் முதல் இல் பௌர்ணமி போயா நாள் வரையிலான காலத்தில் பௌத்த விகாரைகளில் கட்டின பிங்கம சடங்குகள் நடத்தப்படுகின்றன. மேலும் இந்த சடங்கு அதி உன்னத  ஆசிர்வாதத்தை வழங்கும் புனித சமய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

எட்டு புனித ஸ்தலங்கள் மற்றும் ருவன்வெலிசேய விகாரையின் பிரதம மதகுரு அதி வணக்கத்துக்குரிய  பல்லேகம ஹேமரத்தன தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளர் மரியாதை செலுத்தினார். நாயக்க தேரரின் மேற்பார்வையில் அனைத்து சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் சந்தஹிரு சேய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.