‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019’ அதன் இரண்டாவது நாளில்
ஆகஸ்ட் 30, 2019இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019' அதன் இரண்டாவது மற்றும் இறுதி நாளாக இன்றும் (ஆகஸ்ட், 30) இடம்பெறுகிறது.
இரண்டு நாட்களைக்கொண்ட இச் சர்வதேச மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர்கூடத்தில் நேற்று ஆரம்பமானது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இவ்வருட பாதுகாப்பு மாநாடு "தற்கால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவ சிறப்பியல்பு" எனும் தொனிப்பொருளில் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் அமர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் 42 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 13 வெளிநாட்டு மற்றும் 14 உள்ளூர் பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.