'9வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு' வெற்றிகரமாக நிறைவு...
ஆகஸ்ட் 31, 2019வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட்,29) ஆரம்பமான சர்வதேச மாநாடான ஒன்பதாவது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019' இன்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுற்றது. ஒன்பதாவது வருடமாகவும் இடம்பெற்ற இரண்டு நாட்களைக் கொண்ட இம்மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டின் ஆரம்ப உரை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இச் சர்வதேச மாநாடு, "தற்கால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவ சிறப்பியல்பு" எனும் தொனிப்பொருளில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
இந்த முறை மாநாட்டில் சுமார் 800 உள்ளூர் மற்றும் சர்வதேச இராணுவ பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் தொனிப்பொருள் சார்ந்த தமது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தனித்துவமான தளத்தை இம்மாநாடு வழங்கியது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு .ரவினாத ஆர்யாசின்ஹா, நிறைவுறையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.