கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 11, 2022

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (நவம்பர் 11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இரு அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற குறுகிய கலந்துரையாடலின் போது, புதிதாக நியமனம் பெற்றுள்ள கடலோர பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, கடலோர பாதுகாப்புப் படையின் 7வது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் விதான அவர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

அதன்படி, ரியர் அட்மிரல் விதான இந்த ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.