களனி ஆற்றில் ஏற்பட்ட தடைகளை இலங்கை இராணுவப் படையினர் அகற்றினர்
நவம்பர் 14, 2022இலங்கை இராணுவப் படையினர் உடனடியாக செயற்பட்டு நவகமுவ, மாபிடிகம களனி 'பொடி பாலம' ஆற்று நீர் ஓட்டத்தை பாதித்த கொங்கிரீட் தூண்களைச் சுற்றியிருந்த மூங்கில் மரங்களின் அடைப்பை அகற்றும் பணியை சனிக்கிழமை (நவம்பர்12) முன்னெடுத்தனர்.
கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு இணைக்கப்பட்ட இராணுவத்தினர் குழுவொன்றை உரிய இடத்திற்கு அனுப்பி வைத்ததாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்தது.
ஆற்றில் வழிந்தோடிய வெள்ளக் குப்பைகள் பாலத்தின் அடியில் தேங்கி, ஆற்றின் சீரான ஓட்டத்தை சீர்குலைத்தது.
இதற்கமைய, மேற்கு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புசெல்ல அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலகு காலாட் படையணியின் சிப்பாய்கள் மற்றும் நவகமுவவில் உள்ள பொலிஸாரின் ஆதரவுடன் சில மணிநேரங்களுக்குள் தடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்தது.