கொரிய சிவில் இராணுவ செயற்பாட்டு தலைவர் இலங்கை இராணுவ மருத்துவ படையின் கொவிட் – 19 தடுப்பு முறைக்கு பாராட்டு

நவம்பர் 16, 2022

கொரிய குடியரசின் சிவில் இராணுவ நடவடிக்கை பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் தியோக்சங் ஜங் மற்றும் வெளிநாட்டுப் பணியமர்த்தல் பிரிவின் பிரதி பணிப்பாளர் லெப்டினன் கேணல் குவான்ஹியோ லீ ஆகியோர் சமீபத்தில் தென் சூடான் போரில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படை கட்டம் 2 மருத்துவமனைக்குச் விஜயம் செய்து கொவிட் – 19, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களைத் தடுப்பதற்காக லெப்டினன் கேணல் என்.எம் நிப்லர் ஆல் கட்டளையிடப்படும் 8 வது படையணியின் சுகாதாரப் பிரிவின் சிறந்த சேவைகளைப் பாராட்டினர்.

மேலும், தெற்கு சூடான் குடியரசில் ஐக்கிய நாடுகளின் பணியின் தென் கொரிய பொறியியல் படையணியின் வழக்கமான பரிசோதனையின் போது, போரில் உள்ள கொரிய படையணியின் முகாமுக்கு இலங்கை இராணுவ மருத்துவ படையினரின் பங்களிப்பை பாராட்டினர்.

தொடர்ந்து, விருந்தினர்கள் புத்தகத்தில் கையொப்பமிட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

நன்றி - www.army.lk