இவ்வருடத்திற்கான (2019) 10வது 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கைகள் - ஆரம்பம்.
செப்டம்பர் 03, 2019இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்திருந்த களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் மின்னேரியவிலுள்ள களமுனை போர் பயிற்சி தலைமையகத்தில் இன்று (செப்டம்பர்,03) ஆரம்பமானது.
இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்துள்ள இவ்வருடாந்த களமுனை கூட்டு முப்படை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும் இப்பயிற்சி நடவடிக்கைகள், கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சியின் இறுதிநிகழ்வுகள், செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ‘மாதிரி போர் ஒத்திகை’ யின் பின்னர் செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.