கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 'சர்வதேச ஆய்வு மாநாடு' அடுத்த வாரம் ஆரம்பம்

செப்டம்பர் 03, 2019

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு அடுத்த வாரம் (செப்டெம்பர்,11&12) ஆரம்பமாகவுள்ளது. இந்நாட்டின் முதற் தரம் வாய்ந்த பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டு வரிசையில் இது 12வது ஆய்வு மாநாடு ஆகும்.

இவ்வருடத்திற்கான சர்வதேச ஆய்வு மாநாடு “புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதில் மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் இரத்மலான பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள், சட்டம், முகாமைத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் வெளி அறிவியல்,கணனியியல், மருத்துவம், அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல், ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற பதினோராவது சர்வதேச ஆய்வு மாநாடு "ஒத்துழைப்பு மூலம் தொழில் நுட்ப திறனை பாதுகாத்தல்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு http://www.kdu.ac.lk/irc2019/ எனும் இணைய தளத்தினை அனுகுகவும்...