'உதராய் ஒப' படைவீரர் நலத்திட்டத்திற்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு
செப்டம்பர் 03, 2019பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை களியாட்ட நிகழ்வான ‘உதராய் ஒப’ இம் மாதம் (செப்டம்பர்) 14 ஆம் திகதி மாலை 06.30 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விசை களியாட்ட நிகழ்வானது, முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டம் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சோனியா கோட்டெகோட்டே அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இக்குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.
முன்மொழியப்பட்ட தொழிற்பயிற்சி மத்திய நிலையம், விருந்தினர் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல கற்கைநெறிகளை வழங்கவுள்ளது. இம் முயற்சியை ஆதரவளிப்பதர்காக ஏராளமான தனியார் துறை நிறுவங்கள் நிதியனுசரனை வழங்க முன்வந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கான நுளைவுச் சீட்டுக்களை www.mytickets.lk எனும் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.