153வது பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டது

செப்டம்பர் 04, 2019

இலங்கை பொலிஸ் தனது 153 வது ‘பொலிஸ் தினத்தை’ நேற்று (செப்டம்பர், 03) கொண்டாடியது. 153 வது ‘பொலிஸ் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றதாக பொலிஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் சம்பிரதாய மரபுகளுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட வைபவத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

தற்போதைய இலங்கை பொலிஸ் 1866ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ம் திகதியன்று உருவாக்கப்பட்டது.

இதேவேளை, அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி சாம்பியனானது. வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா பொலீஸ் அணியை வீழ்த்தி இலங்கை பொலிஸ் அணி இப்பட்டத்தை சுவீகரித்தது. குறித்த இப்போட்டி, வொர்செஸ்டர் பொலிஸ் கிரிக்கெட் கிளப்பினால் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.