முல்லைத்தீவில் தேவையுடைய மாணவர்களுக்கு காலணிகள் வழங்கிவைப்பு

செப்டம்பர் 07, 2019

அண்மையில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாதணிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர் குழுவினர்கள் பயனடைந்துள்ளனர்.

இதன்பிரகாரம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கருவப்பட்டமுறிப்பு பகுதியிலுள்ள 147 பாடசாலை மாணவர்களுக்கு கருவப்பட்டமுறிப்பு வித்தியாலயத்தில் 4 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் போது காலணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் குறித்த மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தனியார் நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட இவ்வன்பளிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் 64 ஆம் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் (WDCK) கொஸ்தா 13வது இலங்கை தேசிய காவற்படையின் 643 படைப்பிரிவு கட்டளைத் தளபதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.