அகுரேகொட பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிட தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு விஜயம்

செப்டம்பர் 07, 2019

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று (செப்டம்பர், 07) மேற்கொண்டார்.

பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிட தொகுதிகளின் நிர்மானப்பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் தற்போதை நிலவரங்கள் தொடர்பாக, அவற்றின் பூரப்படுத்துவதற்கு எடுக்கும் காலம் என்பன தொடர்பாக கேட்டரிந்துகொண்டதுடன் நிர்மாணப்பணிகளை விரைவு படுத்துவதற்கு அவசியமான அறிவுறுத்தல்களையும் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கிவைத்தார். பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் இக் கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே.பதிரேஜ் அவர்களால் திட்டத்தின் தற்போதைய பணிகள் குறித்து அளிக்கப்ப்பட்ட விளக்க உரையிலும் பாதகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, திட்ட வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.