‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வு போர் வீரர்களின் நினைவுடன் நிறைவு
செப்டம்பர் 09, 2019நிறுவங்களுக்கிடையிலான முதலாவது சர்வதேச மதிப்பீட்டு அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை தியதலாவயிலுள்ள சினோ - லங்கா நட்புறவு கேட்போர்கூடத்தில் (நெலும் பொகுன) இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் மேற்கு- பாதுகாப்பு படைகளின் தளபதி, மேஜர் ஜெனெரல் எல் எம் முதலிகே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அதேவேளை, வீர மாதா, விஷாரதா சுஜாதா அத்தநாயக அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.இத்திறந்த செஸ் போட்டி நிகழ்வில், இலங்கை கடற்படை செஸ் அணியினர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், பேராதனை பல்கலைக்கழக அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். மூன்று பிரிவுகளிகீல் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் 32 குழுக்கள் போட்டியிட்டனர். இதன்போது இடம்பெற்ற போட்டியில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மொரட்டுவை பல்கலைக்கழக அணியினர் பெற்றுக்கொண்ட அதேவேளை, பேராதனை பல்கலைக்கழக பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
மேலும், அங்கவீனமுற்ற போட்டியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் கம்புறுபிட்டிய அபிமன்சல பரா II அணியினை தோற்கடித்து ராகம ரணவிரு செவனா அணியினர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுகொண்டனர்.
இவ்விருது வழங்கும் நிகழ்வில், இராணுவ செஸ் குழுவின் தலைவர், பிரிகேடியர் கித்சிரி ஏகநாயக்க அவர்கள் புகழ்பெற்ற சிரேஷ்ட கலைஞரான வீரமாத விஷாரதா சுஜாதா அத்தநாயக்க அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தமை சிறப்பம்சமாகும். இதன்போது அவரது கணவர் திரு நவரத்ன அத்தநாயக்க அவர்களும் இணைந்திருந்தார். மேலும், வீர மாதா சுஜாதா அத்தநாயக்க அவர்களின் மகனான கெப்டன் சனகா சஞ்சீவா அத்தனாயக்க, 1992 செப்டம்பர் 25 ஆம் தேதி பூனெரினில் கடமையில் இருந்தபோது தேசத்துக்காக தனது உயிரைத் தியாகம் செய்த போர் வீரர் என்பதுடன், இவ்வீரர் பிரிகேடியர் கித்சிரி ஏகநாயக்க அவர்களின் காலாட்படை பிரிவை சேர்ந்த சக படைவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.