வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் கடற்படை உதவியுடன் நடைபெற்றது

செப்டம்பர் 09, 2019

வருடாந்த மாத்தறை எமது மாதா திருச்செரூப உற்சவம் இம்மாதம் 06ம் திகதி முதல் 08ம் திகதிவரை இடம்பெற்றது. இத்திருவிழாவில் பெருமளவிலான கத்தோலிக்கக பக்தர்கள் கலந்து கொண்டனர். குறித்த இத்திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறுவதற்கு இலங்கை கடற்படையினரால் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எமது மாதா திருச்செரூபம் வீதியில் பவனி வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவியளித்தனர். வீதியில் பவனி வந்த எமது மாதாவினை பெருமளவிலான கத்தோலிக்க பக்தர்கள் தரிசித்தனர்.

கடற்படையினரால் அளிக்கப்பட இவ்வுதவி காலி மறைமாவட்ட ஆயர் வண. ரேமன்ட் விக்கிரமசிங்க மற்றும் குழுமியிருந்த கத்தோலிக்க பக்தர்களினாலும் பெரிதும் பாரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.