“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி ஊடாக பயங்கரவாத குழுக்களை கைப்பற்றும் நடவடிக்கை

செப்டம்பர் 09, 2019

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கண்டி கடெம்பே பகுதியில் ஒத்திகை போர் பயிற்சி வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் படையினரின் ஒருங்கிணைந்த குழுக்கள் ஒரு பயங்கரவாத மறைவிடத்தில் ஒரு சோதனையை ஒத்திகை மேற்கொண்டு பயங்கரவாத தலைவர் மற்றும் அவரது உதவியாளர்களை காயமின்றி கைப்பற்றும் நோக்கில் குறித்த ஒத்திகைப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பயிற்சியினை பார்வையிடுவதற்காக இராணுவ தளபதி வருகை தந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையை ஒத்திகை நடவடிக்கையில் , 4 விஷேட படைகள், விமானப்படையின் ஆதரவுடன் 2 எட்டு பேர் கொண்ட அணிகள், இரண்டு சவாரி அணிகள் மற்றும் நகர்ப்புற சண்டைக் குழுக்களுடன் ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்தன. இதற்கிடையில், இரண்டு 4 விஷேட படையின் எட்டு பேர் கொண்ட அணிகள் இரண்டு பெல் 212 ஹெலிகாப்டர்களில் இருந்து இறங்கி தாக்குதல் இலக்கு பிரதேசத்திற்கு விரைந்து சென்றது. ரைடர்ஸ் குழுவானது வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு வழங்கினார், குறிப்பாக நகர்ப்புற சண்டைக்காக வடிவமைக்கப்பட்டு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதத் தலைவரையும் அவரது குழுவினரையும் கைப்பற்றியது.

இந்நிகழ்வில், பயிற்சியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் லக்சிறிவடுகே, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.