ஊடக அறிக்கை

செப்டம்பர் 09, 2019

பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக

1. இதுதொடர்பாக, பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை குறிப்புகள் குறித்து பிற அரசு நிறுவனங்கள் மேற்கொண்ட அவதானிப்புகளை ஆய்வு செய்ய பின்வரும் அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் துணைக்குழு நியமிக்கப்பட்டது.

a. பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதி (தலைவர்)

b. நிதி அமைச்சின் செயலாளர் பரிந்துரைத்த பிரதிநிதி (உறுப்பினர்)

c. ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (உறுப்பினர்)

d. பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்ட பிரதிநிதி (அழைப்பாளர்)

2. இதன்பிரகாரம், இந்த வாரத்தில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க துணைக்குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்.