பங்களாதேஷ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

செப்டம்பர் 10, 2019

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'சொமுத்ர அவிஜான்' கப்பலை பார்வையிடுவதற்காக அவர்கள் பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று (செப்டம்பர்,07 )விஜயம் செய்தார்.

குறித்த கப்பலுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் ஜாஹிருள் ஹக் அவர்கள் வரவேற்றார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் கப்பலின் அதிகாரிகளுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்ட அதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோரிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் அதிமேதகு கொமடோ செய்த் மக்ஸுமுல் ஹக்கீம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸ், முன்னாள் தளபதிகள், இராஜதந்திர உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.