ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் - வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

செப்டம்பர் 10, 2019

இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடன் அமுலக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு (செப்டம்பர், 09) வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.