‘பனைமர படைப்பாற்றல்- 2019’ புத்தாக்க கண்காட்சி

செப்டம்பர் 12, 2019

யாழில் உள்ள படை வீரர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் படைப்பாளிகள் ஆகியோரின் புத்தாக்க திறனை ஊக்குவிப்பதற்கும், புதுமையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்குமான ஒரு தளத்தினை அமைத்துகொடுக்கும் நோக்கில் யாழ்- பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அண்மையில் கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் இடம்பெறும் ‘பனைமர படைப்பாற்றல்- 2019’ புத்தாக்க கண்காட்சி யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இம்மாதம் 04ம் மற்றும் 05ம் திகதிகளில் நடைபெற்றது.

இக் கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட நாற்பது புத்தாக்கங்களில், முதலாம் இடத்தினை 14வது கஜாபா ரெஜிமென்ட்டின் கோப்ரல் டப்பிடப் திசானாயக்கவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே 4வது இலங்கை சிங்க ரெஜிமென்ட்டின் கோப்ரல் ஜிசிசிஆர் பொன்சேகா மற்றும் 7வது இலங்கை இராணுவ மகளிர் படையனியின் எஸ்டிஎன் மல்ஷா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்காக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ் மாவட்ட செயலாளர் திரு நாகலிங்கம், வட பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரால் கபில சமரவீர, 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேகொட மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தினர்.