வெளிநாட்டு விஜயங்களின் பின் கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின
செப்டம்பர் 12, 2019பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு தாயகத்திலிருந்து பயணமான இரண்டு கடற்படைக் கப்பல்களும் இவ்வார இறுதியில் (செப்டம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தன. ‘இலங்கை கடற்படை கப்பல் சயுர’ மற்றும் ‘இலங்கை கடற்படை கப்பல் நந்தமித்ர’ ஆகிய கப்பல்கள் கடந்த மாதம் (ஆகஸ்ட் , 22) பயிற்சி நடவடிக்கைகளுக்காக பங்களாதேஷ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளை நோக்கி பயணத்தினை மேற்கொண்டது.
இரு கப்பல்களும் கடந்த மாதம் 26ம் திகதி பங்களாதேஷின் சிட்டகொங் துறைமுகத்தை சென்றடைந்தது. 29ஆம் திகதி வரை குறித்த துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளை, இக் கப்பலின் பயிலுனர் அதிகாரிகள் பங்களாதேஷ் கடற்படை அகடமியை சுற்றி பார்வையிட்டார். மேலும், சிட்டகொங் துறைமுகத்திலிருந்து புறப்படும் வேளையில் இலங்கை கடற்படை கப்பல்களின் அதிகாரிகள் தமது பங்களாதேஷ் சகாக்களுடன் இணைந்து ஒரு பயணப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ‘சயுர’ மற்றும் ‘நந்திமித்ர’ கப்பல்கள் இம் மாதம் 01 ஆம் திகதி மியான்மரில் உள்ள யாங்கூன் துறைமுகத்தினை சென்றடைந்தன. குறித்த இக்கப்பல்கள் இத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில் இரு கப்பல்களின் குழுவினரும் எம்.என். 1 வது கடற்படை, கடற்படை பயிற்சி கட்டளை மற்றும் தேசிய கிராமத்தை பார்வையிட்டனர்.
தனது பயிற்சி பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த இவ்விரு கப்பல்களும் கடந்த 4ம் திகதி மியன்மாரிலிருந்து தாயகம் நோக்கி பயணமானது குறிப்பிடத்தக்கது.