‘உதராய் ஒப’ மிகவிரைவில்
செப்டம்பர் 12, 2019ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்வு சனிக்கிழமையன்று
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசை களியாட்டம் நிகழ்வான ‘உதராய் ஒப’ இம் மாதம் (செப்டம்பர்) 14 ஆம் திகதி மாலை 06.30 மணிக்கு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விசை களியாட்ட நிகழ்வானது, முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான சுனில் எதிரிசிங்க, எட்வர்ட் ஜெயகோடி, சரிதா பிரியதர்ஷனி, கீர்த்தி பாஸ்கல், டி.எம். ஜெயரத்ன, சுஜாதா அத்தநாயக்க, தனபால உடவத்த, தீபிகா பிரியதர்ஷினி, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், லதா வல்பொல, உமரியா சின்கவங்ஷ, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் இசை கலைஞர்கள் குழுவினரும் பங்கேற்று இவ் இசை நிகழ்விற்கு பின்னணி இசை வழங்கவுள்ளனர்.
'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டமானது முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏற்பாடுசெய்திருந்தது.
முன்மொழியப்பட்ட தொழிற்பயிற்சி மத்திய நிலையம், விருந்தினர் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல கற்கைநெறிகளை வழங்கவுள்ளது. இம் முயற்சியை ஆதரவளிப்பதர்காக ஏராளமான தனியார் துறை நிறுவங்கள் நிதியனுசரனை வழங்க முன்வந்துள்ளனர். அந்தவகையில் எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, இலங்கை காப்புறுதி நிறுவனம், ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், லாப்ஸ் கேஸ் பி.எல்.சி, சிலோன் பத்திரிகை நிறுவனம், டப்யூ.டி.எஸ் குரூப் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குவதுடன், தனிப்பட்ட நன்கொடையாளர்களான திரு. மதுர விக்ரமரத்ன, திரு. சுரேஷ் பெர்னாண்டோ, திரு. சாண்டி மற்றும் திரு. ரொகான் அதுரேலிய ஆகியோரும் சுயமாக முன்வந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் தமது உதவிகளை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.
www.mytickets.lk எனும் இணையத்தளம் ஊடாக நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.