“நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த சிவிலியன் பணயக் கைதிகள் விடுவிப்பு

செப்டம்பர் 13, 2019

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திகை போர் பயிற்சி நடவடிக்கைகள் வியாழக்கிழமை (செப்டம்பர், 12) இடம்பெற்றுள்ளது. இதன்பிரகாரம் தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியூடான பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் பயங்கரவாத குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழுவினர் முப்படையினரின் வெற்றிகரமான ஒரு கள நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்பாகமுவ நீர்த்தேக்கப்பகுதியிலுள்ள தீவொன்றில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை சோதனையிட்ட படையினர் சிறைபிடிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 3 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட உயிர் காப்பு படகுப் பிரிவு மற்றும் விமானப்படையின் எம்ஐ 17 ரக உலங்குவானூர்தி ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டன. ஹலோ காஸ்டிங் மற்றும் காம்பாட் டைவிங் நுட்பங்களை திறமையான முறையில் பயன்படுத்தி எதிரிகளின் மறைவிடத்தை அடைந்த படைத்தரப்பினர் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் படைத்தரப்பினரால் தலைவர் உட்பட ஆறு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட அரச அதிகாரிகள் விமானம் மூலம் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

10வது முறையாகவும் இடம்பெறவுள்ள இக்களமுனை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நீர்க்காக கூட்டு பயிற்சி- X' நடவடிக்கை, கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

இப் பயிற்சி, செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள ‘மாதிரி போர் ஒத்திகை’ யின் பின்னர் செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.