சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடிக் படகுகள் கடற்படை வசம்

செப்டம்பர் 17, 2019

பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல்கள் மாலைதீவுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்களின் நான்கு பல நாள் மீன்பிடிப்படகுகளை கைப்பற்றியுள்ளனர்.  தனுஜி', 'சுப பெதும் 4', 'லக்பிரிய தேஹி' மற்றும் 'நலின் 10'  ஆகிய படகுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகுகளுடன் அதிலுள்ள 27 மீனவர்களையும்  மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு நேற்று (செப்டம்பர், 16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனை நடவடிக்கையின்போது சிறிதளவு ஐய்ஸ் வகை போதைப்பொருள் ஒரு படகிலும் ஒரு தொகை சுறாமீன் வால் துண்டுகள் மற்றுமொரு படகிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப் படகுகளுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருக்கின்றதா என தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதுடன், கைப்பற்றப்பட்ட ஒரு தொகை சுறாமீன் வால் துண்டுகள் தொடர்பாக மீன்பிடித்துறை அதிகாரசபை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.