கொழும்பு டெலிகிராப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி கட்டுரை குறித்த தெளிவு

ஜூன் 17, 2019

இலங்கையில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் சிரச தொலைக்காட்சியின் 'பதிகட' நேர்காணல் நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இன்று ( ஜூன்,17) கொழும்பு டெலிகிராப் பத்திரிகையில் செய்தி கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் பாதுகாப்பு செயலாளருடனான நேர்காணலின் ஒரு பகுதியை மட்டுமே முன்னிலைப்படுத்தியுள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது, மேலும் இது பாதுகாப்பு செயலாளர் அவர்கள் வழங்கிய கருத்துக்கள் முழுவதையும் பிரதிபலிப்பன அல்ல.

முழுமையான நேர்காணலுக்கு கீழே உள்ள இணைப்பை பார்க்க.