அங்கவீனமுற்ற யுத்த வீரர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான உபகுழு அறிக்கை இறுதிகட்டத்தில்

செப்டம்பர் 18, 2019

55 வயது வரை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக உபகுழு அறிக்கை செயற்பாடுகளை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (செப்டம்பர், 18) இடம்பெற்றது.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராணுவப்பேச்சாளர், ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்கள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கக்கோரி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களினால் கடந்த சில நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவர்களின் கோரிக்கைகள் தொடர்பான உபகுழு அறிக்கை பாதுகாப்பு செயலாளரினால் இம்மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டு அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு மேலும் ஒரு வார காலம் அமைச்சரவையினால் கேட்டுக்கொள்ளப்பட்டதகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் இப்போராட்டக்காரர்களை சந்தித்து அறிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாக தெளிவு படுத்தினர்.

இவ்வறிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன், இதனை நிறைவுசெய்வதற்கு மேலும் சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்பிரகாரம் போராட்டத்தினை கைவிட்டு அமைதியை பேணுமாறு யுத்த வீரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.