பயங்கரவாதிகளின் போதைப்பொருள் மறைவிடத்தினை சோதனையிடும் ஒத்திகை நடவடிக்கைகள்

செப்டம்பர் 20, 2019

தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக  படையினர், பயங்கரவாதிகளின் போதைப்பொருள் விநியோக இடங்களை சோதனை செய்யும் பல  ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.  இலுப்பைகட்டவழி பிரதேசத்தில் உள்ள  பயங்கரவாத போதைப்பொருள் விநியோக பிரிவு மற்றும் நரக்கமுல்லை உள்ள அவர்களின் நிர்வாக பிரிவு ஆகியவற்றை தாக்கி அழிக்கும் ஒத்திகை பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 இராணுவ கமாண்டோக்கள், கடற்படை சிறப்பு படகு பிரிவு வீரர்கள் , சீன, பாகிஸ்தான் மற்றும் மலேசிய படை வீரர்கள்  மற்றும்  விமானப்படை வீரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சோதனைக் குழு, தாக்குதல் நடாத்த தீர்மானித்திருக்கும் தினத்திற்கு முன் தினம் இலுப்பைக்கட்டைவழி பிரதேதத்திற்குள் ஊடுருவி தாக்குதலை அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் உளவறி ரோந்துபணிகளில் ஈடுபட்டது.

இதேவேளை, நரக்கமுல்லை பிரதேசத்தில்  கமாண்டோ படை வீரர்களினால், பயங்கரவாதிகளின் பிரதான நிர்வாக கட்டடங்கள் , தளவாட தளம் ஆகியவற்றை முழுமையாக  அழித்தொழிக்கும் ஒத்திகை படை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை  மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை படை நடவடிக்கையில், கமாண்டோ படை வீரர்கள் பலாபிட்டிய  மாது  கங்கையில் ஏற்பட்ட  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  கமாண்டோ  படை வீரர்களின் தேடல் மற்றும் மீட்பு திறன்களை வளர்க்கும் நோக்கில் குறித்த இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில்  கடற்படையின்  4 ஆர் பிரிவுபடை வீரர்கள், விமானப்படையின் அதிரடி வீரர்கள் மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

10ஆவது முறையாகவும் இலங்கை இராணுவம் ஏற்பாடுசெய்துள்ள வருடாந்த “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” களமுனை கூட்டு முப்படை பயிற்சியில் 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் கலந்துகொள்வதுடன், மலேசியா, மாலத்தீவு, நேபாளம், ரஷ்யா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவ பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.