காயமுற்ற கப்பல் சிப்பந்தி ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

செப்டம்பர் 20, 2019

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட  எண்ணெய்க்கப்பல் ஊழியர் ஒருவரை கரைக்கு  கொண்டு வர இலங்கை கடற்படையினர்  உதவியளித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பாக கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த எண்ணெய்க்கப்பல்  நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு  மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த   எண்ணெய்க்கப்பலுக்கு  இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு விரைந்து சென்று மருத்துவ உதவி தேவைப்பட்ட  எண்ணெய்க்கப்பல் ஊழியரை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட நபர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு  பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.