இந்திய முப்படை பிரதிநிதிகள் குழு தலதா மாளிகைக்கு விஜயம்
ஜூன் 17, 2019இலங்கை இந்திய இராணுவத்திற்கிடையில் நிலவும் பரஸ்பர உறவினை வலுப்படுத்தும் வகையிலான பயணத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ தூதுக்குழு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று தலதா மாளிகைக்கு விஜயம் செய்தனர். தமது துணைவியாருடன் வருகை தந்த 159 இந்திய இராணுவ பிரதிநிதிகளும் தங்கள் பயணத்தின் போது பின்னவள யானைகள் சரனாலத்திற்கும் பயணம் மேற்கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இந்திய இராணுவ த்திற்கிடையில் நிலவும் பரஸ்பர உறவினை வலுப்படுத்தும் வகையில் பயண ஏற்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருந்தது. இதேவேளை, இலங்கை 162 முப்படை பிரதிநிதிகள் தமது துணைவியாருடன் கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டனர். இந்திய முப்படை பிரதிநிதிகளில் 95 இராணுவத்தினர், 32 கடற்படையினர், 32 விமானப்படையினர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் நாடு திரும்பும் முன் இலங்கையின் பல பாகங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை முப்படை பிரதிநிதிகள், புனித தளமான புத்தகயாவினை ஞாயிற்றுக்கிழமை தரிசிக்கவுள்ளதுடன் மேலும் பல இடங்களையும் பார்வையிடவுள்ளனர்.
இலங்கை வருகை தந்த இந்திய முப்படை பிரதிநிதிகளை வரவேற்பதற்காகவும் இலங்கை முப்படை பிரதிநிதிகளை வழியனுப்பிவைப்பதற்காகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. தரஞ்சித் சிங், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.