வன்னி இராணுவத்தினரால் சமூக நலன்புரி திட்டங்கள் முன்னெடுப்பு

செப்டம்பர் 20, 2019

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்த விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வில் சுமார் 300 க்கும் அதிகமான பார்வைக் குறைபாடுடைய பொதுமக்கள்  பயனடைந்துள்ளனர்.

கடந்தவாரம் (செப்டம்பர், 13)  இடம்பெற்ற இவ் விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வினை வன்னி பாதுகாப்பு படை தலைமையாகத்தின் 56 ஆவது படைபிரிவினர் கண் விஷேட வைத்திய நிபுணர்கள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலை பணியாளர் குழாம், ஆகியோருடன் இணைந்து  மேற்கொண்டுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையாகத்தின் முயற்சியால் இச் சமூக நலன்புரிச் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டு மாத்தறை லயன்ஸ் கிளப் அனுசரையில்  அவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை,  'சந்தாஹிரு சேயா' (ஸ்தூபம்) இன் கட்டுமான பணிகளுக்கு  வன்னி பாதுகாப்பு படை தலைமையாகத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும்  'கியோஷிரு பூடோ' தற்காப்பு கலை நிகழ்ச்சி கட்டம் II இல் உள்ள சுமார்  800 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் அடங்கிய குழு, தமது உதவியினை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வின் மூலம் தேசிய திட்டத்திற்கு பங்களிப்பு வழங்குவதுடன், பயிற்சியாளர்களை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தூபியானது யுத்தத்தில் தமதுயிரை தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களின் ஞாபகார்த்தமாக  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.