முப் படைகள்,, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் வாத்திய இசைக் குழுவினர் பாராட்டு
செப்டம்பர் 23, 2019அண்மையில் நடைபெற்ற ‘உதாரய் ஓப’ இசை களியாட்ட நிகழ்விற்கு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் வாத்திய, இசை மற்றும் கலாச்சார குழுக்களால் வழங்கப்பட்ட சேவைகளைப் பாராட்டும் வகையில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் பாராட்டு விழா ஒன்று இடம்பெற்றது.
இன்று (செப்டம்பர், 23) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் சேவா வனிதா பிரிவின் சார்பாக இங்கு வருகை தந்த குழுவினருக்கு நன்றியை தெரிவித்ததுடன், இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்ஆகியோர் கலந்தொகொண்டனர்.
‘உதராய் ஒப’ இசை களியாட்ட நிகழ்வானது, இம் மாதம் (செப்டம்பர்) 14 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். புகழ்பெற்ற மூத்த மற்றும் இளம் கலைஞர்கள், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் இசைக் குழுக்கள் இணைந்து இசை பிரியர்களை கவரும் வண்ணம் பிரபலமான பாடல்களை இவ் இசை நிகழ்ச்சியில் வழங்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.