பாதுகாப்பு படைகளின் பிரதாயினால் ரோயல் கல்லூரி வளாகத்தில் போர் வீரர்கள் நினைவு தூபி திறந்துவைப்பு

செப்டம்பர் 24, 2019

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட போர் வீரர்களின் நினைவு தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (செப்டம்பர், 23) கலந்து சிறப்பித்தார்.

இப்புதிய இடமாற்றம் செய்யப்பட்ட நினைவு தூபி, நன்கொடையாளியும் ரோயல் பழையமாணவர்கள் கெடட் வாத்தியக்குழு சங்க தலைவருமான திரு. சந்திமால் பெர்னாண்டோ  அவர்களின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கெடட்ஸ் சதுக்கம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதுடன், கெடட் வத்தியக் குளுவினருக்கு உத்தியோகபூர்வ பிளேஸர் வழங்கி வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாடசாலை நிர்வாகிகள், முப்படை அதிகாரிகள், பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.