பயங்கரவாத எதிர்ப்புக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 30, 2019

பயங்கரவாத எதிர்ப்புக்கான அவுஸ்திரேலிய தூதுவர், திரு. போல் போலூய், இலங்கைக்கான  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி ஆகியோர் இணைந்து பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 30) சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பிரதி அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், திருமதி விக்டோரியா கோக்லி மற்றும் தேசிய புலனாய்வுத்துறை பிரதானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.