பின்தங்கிய பாடசாலைக்கு விமானப்படையினர் உதவி

ஒக்டோபர் 01, 2019

அண்மையில் வவுனியாவில் உள்ள விமானப்படை வீரர்கள்  இப்பிராந்தியத்தின் பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர். இலங்கை விமானப்படை வீரர்கள் அவர்களின் சமூக சேவை முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக வவுனியா விமானப்படை தளத்தினால் மகாகச்சகோடியா முன்பள்ளியில் ஒரு தொண்டு நிகழ்வொன்று சனிக்கிழமை (செப்டம்பர், 28)  இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, பாடசாலை கட்டிடத்தை புனர்நிர்மானம் செய்வதற்கான உதவிகளை  வழங்கியதுடன், இம் முன்பள்ளியில் கல்விபயிலும் சிறுவர்களுக்காக 750 புத்தகங்களையும் விமானப்படை வீரர்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில், வவுனியா விமானப்படை தள கட்டளை தளபதி, எயார் கொமொடோ எல் எச் சுமனவீர, அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.