ஸ்ரீ மகா போதியில் இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் வைபவம்
ஒக்டோபர் 01, 2019இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் பிரதான நிகழ்வு அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் இன்று (ஒக்டோபர், 01) இடம்பெற்றது. இதன்போது இராணுவ கொடிகளுக்கு அட்டமஸ்தானதிபதி அதி வண. கலாநிதி. பல்லேகம சிரினிவாச நாயக்க தேரர் அவர்களினால் அனுசாசனம் வழங்கப்பட்டது.
இராணுவ வீரர்களினால் சுமந்துவரப்பட்ட இராணுவத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளுக்கு பிரித் ஓதி பன்னீர் தெளித்து மகா சங்கத்தினரால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் மகா நாயக்க தேரர்களினால் அங்கு குழுமியிருந்த இராணுவ வீரர்களுக்கு விஷேட சொற்பொழிவுகளும் ஆற்றப்பட்டன.
இவ்வைபவத்திற்கு வருகை தந்திருந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா அவர்களினால் அட்டமஸ்தானதிபதி அபிவிருத்தி பணிகளுக்காக ரூபா ஒரு மில்லியன் நன்கொடை நிதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகளின் பிரதானி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகளவிலான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம் வாதம் வழங்கும் பிரதான பௌத்த மத நிகவுகள், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது.
இலங்கை இராணுவம் தனது 70வது ஆண்டு நிறைவு தினத்தை எதிர் வரும் 10ம் திகதி கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.