ரஷ்யா - இலங்கை இருதரப்பு இராணுவ கூட்டுறவு கலந்துரையாடல்

ஒக்டோபர் 02, 2019

ரஷ்யா மற்றும்  இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு இராணுவ கூட்டுறவு தொடர்பான சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஒக்டோபர், 01)  இடம்பெற்றது.   

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, உள்ளூர் தூதுக் குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்  திரு. அனுராதா விஜேகோன் அவர்கள் தலைமை வகித்த அதேவேளை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு ராணுவ ஒத்துழைப்பு முதன்மை பணியகத்தின் 5 வது திணைக்களத்தின் தலைவர், கேணல் மக்ஸிம் பென்கின் அவர்கள் ரஷ்ய பிரதிநிதிகள் குழுவினருக்கும் தலைமைதாங்கினார்.

இச்சந்திப்பின்போது, இருதரப்பு இராணுவ பிரச்சினைகள், பயிற்சிகள் இராணுவ பரிமாற்றம் மற்றும் உதவிகள், உள்ளிட்ட விடயங்களுடன் எதிர்வரும் ஆண்டிற்கான வருகைகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீஜே கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட முப்படை இராணுவ அதிகாரிகளும் அவர்களும் கலந்து கொண்டார்.